ஆதி சைவம் - பரமசிவனே அருளும் பரமசிவாத்வைத சைவம்!

September 30, 2019

2,064 views

இன்றைய சத்சங்கத்தின் சாரம்! 28-செப்டம்பர்-2019 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்... உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. *உயர்கால மண்டலங்கள்.. Vertical time zone. அதைப் பற்றிய அறிவியலை ஆழ்ந்து கேளுங்கள்.. தாயார் பராசக்தி உலகத்திற்கு கொண்டு வந்த இந்த விஞ்ஞானம்.. கடந்த சில நாட்களாக சத்சங்கங்கள் வாயிலாக இந்த விஞ்ஞானத்தை உங்களோடு.. பகிரிந்துகொண்டு வருகின்றேன்.. * இப்பொழுது முழுமையாக இதனுடைய சத்தியங்கள், சாத்தியங்கள், தாத்பரியங்கள், பரிமாணங்கள் அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.. உயிரின் மலர்ச்சியை.. மனம் உடைந்த, உணர்வு அறுந்த நிலையில் இருக்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியாது. * உயிரின் மலர்ச்சி ஒவ்வொரு உயிருக்கும் உரிய அடிப்படை உரிமை! இந்த உயிரின் மலர்ச்சியை ஒவ்வொரு உயிருக்கும் அளிப்பதே என் கடமை! * ஆழ்ந்து கேளுங்கள்.. மனம் அறுந்து. உணர்வு உடைந்த நிலையில் இருக்கின்ற மக்கள்.. இந்த வார்த்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. Mentally broken, Consciously Destroyed ஒரு காரை எப்படி ஓட்டுவது என்று கற்றுக்கொடுக்காமல் ஒரு குழந்தைக்கு கார் வாங்கித்தருவது தற்கொலை செய்துகொள்வதற்கு கற்றுக்கொடுப்பதற்கு சமம். * எவ்வாறு ஒரு குழந்தைக்கு அறிவு அளிக்கப்படாமல் ஆற்றல் மட்டும் அளிக்கப்படுமானால்.. அந்த குழந்தையை நாம் கொலை செய்வதற்கோ, தற்கொலை செய்துகொள்வதற்கோ நாம் தூண்டுகின்றோம். * உணர்வு அறுந்து, மனம் உடைந்த நிலை என்பது இதேமாதிரிதான்.. வாழ்வதற்கு அந்தக் குழந்தைக்கு அறிவும் தெளிவும் கொடுக்காமல் வாழ்க்கையை அந்தக் குழந்தையின் கையில் கொடுத்துவிடுவோமனால் உணர்வு அறுந்த நிலைக்கும், மனம் உடைந்த நிலைக்கும்தான் அந்த குழந்தையை நாம் தள்ளுகின்றோம். ------------ * ஆழ்ந்து கேளுங்கள்.. உணர்வறுந்த நிலையிலும், மனமுடைந்த நிலையிலும் உயிர் மலர்ந்தல் சாத்தியமில்லை. உயிர் மலர்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை. * உயர்கால மண்டலங்களைப் பற்றிய அறிவும், எவ்வாறு அது என் வாழ்க்கையிலே பல்வேறு சத்தியங்களாக, சாத்தியங்களாக, சக்திகளாக வெளிப்பட்டது என்பதையும், பரமசிவப் பரம்பொருள் எவ்வாறு பராசக்தியாக எனக்குள் மலர்ந்த அறிவியலையும் அடுத்த 10 நாள் நவராத்திரி விருந்தாக உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.. * அடுத்த 10 நாள் எப்படி இந்த சக்திகள் மலர்கின்றன என்ற அறிவியமுல் சாத்தியமும்தான் உங்களுக்கு நவராத்திரி விருந்து! * என் குரு ரகுபதி யோகி - பதஞ்சலியின் அவதாரம்... பெருமான் பதஞ்சலி நேரடியாக வந்து யோக விஞ்ஞானத்தை புனரமைப்பதற்காக எடுத்த அவதாரம் ரகுபதி யோகி. யோகத்தின் உச்சத்தை அடைந்த யோகி! * என்னை இந்த டெலிடேஷசன் அறிவியலில் பயிற்சி அளிக்க அவருக்கு மொத்தம் 3 மாதம் எடுத்தது. * டெலிடேஷசன் - தமிழில் 'உயர்தல்' எனலாம். சித்தர்கள் பரிபாசையில் சொல்லவேண்டுமென்றால்.. - மாங்காய் பாலுண்டு மலைமேல் இருப்பவர்களுக்கு.. தேங்காய்ப் பால் எதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் எதுக்கடி? என்று குதம்பைச் சித்தர் பாடுகின்ற அந்த உயர் நிலை இந்த நிலைதான்.. ஆழ்ந்து கேளுங்கள்.. * நான் பேசுகின்ற வார்த்தைகள் உங்கள் காதில் வந்து விழுவதற்கு ஊடகமாக இருப்பது காற்று காற்றின் மூலமாகத்தான் ஒலி அலைகள் என்னிடமிருந்து உங்களை வந்த அடைகின்றது! * அதேமாதிரி சூரியன் எங்கோ இருக்கின்றது, சந்திரன் எங்கோ இருக்கின்றது, பூமி எங்கோ இருக்கின்றது, ஆனால் சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியின் மீது இருக்கின்றது. அதனால்தான் ஒரே சீரான இயக்கத்தில் பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது. பிரபஞ்சவியலைப் பற்றி இந்துக்கள் தெரிந்து வைத்திருப்பதைப்போன்ற தெளிந்த அறிவு வேறு எந்த சமூகமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. Satsang Delivered on 28th September 2019

© 2022 Sri Nithyananda Paramashivam. All rights reserved.

KAILASA's Nithyananda TV gives you front-row access to live Satsangs, discourses, latest news, events, and teachings from the SPH Nithyananda Paramashivam.