
KAILASA Is Formed To Be The Seed Bank Of Hinduism || 10 Jan 2021
10 JANUARY 2021, SUNDAY (IST) *SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF SPH, JGM, HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM ON THE AUSPICIOUS OCCASION OF THE 13TH DAY OF THE ONGOING 21-DAY ‘NITHYANANDOTSAVA’, THE 44TH AVATARA DINA DINOTSAVA (BIRTHDAY) CELEBRATIONS OF SPH, JGM, HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. SPH WELCOMED ALL THE IMPORTANT PEOPLE WHO JOINED TODAY AS PART OF 44TH BIRTHDAY CELEBRATIONS (AVATARA MAHOTSAVA). *இந்த இனிய 44வது அவதார பெருவிழாவில் எங்களோடு இணைந்து இருக்கும் அனைத்து நண்பர்களையும், பக்தர்களையும், உலகம் முழுவதிலிருந்தும் அமர்ந்திருக்கும் எல்லோரையும் மரியாதையோடு வணங்கி வரவேற்கிறேன். *இந்த இனிய நன்னாளில் நமது சிறப்பு விருந்தினர்களாக இங்கு வந்திருக்கும் மரியாதைக்குரிய திரு. வலசை ஜெயராமன் ஐயா அவர்களை வணங்கி வரவேற்கின்றேன். *இந்து இயக்கங்களின் ஒரு கூட்டமைப்பின் செயலாளராக இருக்கும் வலசை. ஜெயராமன் அய்யா அவர்களை வணங்கி வரவேற்கின்றேன். வலசை. *ஜெயராமன் அவர்கள் நீண்ட நெடுங்காலம் காஞ்சி சங்கர மடத்தின் மூத்த நிர்வாகி, மற்றும் மேனேஜராக பணியாற்றியவர். *மிகமிக வேகத்தோடும், தைரியத்தோடும் ஒரு வேதாந்த சிங்கத்தைப் போல இந்து மதத்திற்காக பல்வேறு விதங்களிலும் போராடியவர். அதற்காக பல்வேறு இன்னல்கலைச்சந்தித்தவர். *இன்றும் ஊடகங்களிலும், பொது வாழ்க்கையிலும், பொது வெளிகளிலும் இந்துத்மதத்திற்காக தைரியமாகப் போராடி வருகின்ற ஒரு மிகப்பெரிய மூத்த, வேதாந்த சிங்கம் வலசை.ஜெயராமன் ஐயா அவர்கள். *என்னுடைய தனிப்பட்ட முறையிலும் கையிலாயம் என்ற தேசத்தின் சார்பாகவும், வலசை.ஜெயராமன் ஐயா அவர்களை வணங்கி வரவேற்பதில் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன். *இன்றளவிலும் கூட ஊடகங்களில் என் தரப்பு நியாயங்களை மிக வேகமாக, சிம்ம கர்ஜனையாகச்செய்பவர் திரு.வலசை. ஜெயராமன் அவர்கள். *பொது வெளிகளில் மிகவும் தைரியத்தோடு, என் தரப்பு நியாயங்களை எடுத்து வைப்பதற்காக உங்களுக்கு நன்றியோடு வணங்குகின்றேன். *பல பொது நிகழ்ச்சிகளில் திரு. வலசை. ஜெயராமன் அய்யா அவர்கள் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன். *குள்ளநரி கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு வேதாந்த சிங்கத்தின் கர்ஜனை திரு.வலசை. ஜெயராமன் அய்யா அவர்களின் கர்ஜனை. *அவர்களின் கருத்தாழம் மிக்க தெளிவும், செம்மையான வார்த்தைகளும், யாரையும் அவதூறு செய்யாமல் மிக தெளிந்த கருத்துகளை முன்னெடுத்து வைப்பார். *திராவிஷ குள்ளநரி கூட்டத்தில் இந்து மதத்திற்காக தெளிவாகச்செயல்படும் திரு.வலசை. ஜெயராமன் அய்யா அவர்களை மீண்டும் வணங்குகின்றேன். *என்றென்றும் உங்களுக்கு எல்லா நன்மைகளையும், ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அளித்து, பரமசிவப்பரம்பொருள் எல்லா நன்மையுடன் வைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றேன். *உண்மையில் ஒரு விதத்தில் நானும் நேரடியாக பரமாச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளிடம் இருந்து அருளும், ஆசியும் பெற்றவன். தொண்டைமண்டல ஆதீனம் 230வது குருமஹாசந்நிதானம், எனக்கு ஆச்சார்யா அபிஷேகம் செய்து வைத்த பிறகு, என்னை சங்கரமடத்திற்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார். நான் சாஷ்டாங்கமாக பரமாச்சாரியார் முன்பு விழுந்து வணங்கினேன். *எனக்கு ஒரு 10 அல்லது 11 வயதிருக்கும். தொண்டைமண்டலதின் ஆதீனம் 230 வது குருமஹாசந்நிதானம், அவருக்குப்பிறகு நான் சந்நிதானமாக வரவேண்டும் என்று பயிற்சியளித்து பாலசன்யாசம் அளித்தார். *ஆச்சர்யாபிஷேகம் முடித்துவைத்து, சங்கரமடத்திற்கு அழைத்துச்சென்று சுவாமிகளிடம் அறிமுகம் செய்தார். அப்பொழுது பரமாச்சாரியார் கோசாலையில் அமர்ந்திருந்தார். நான் சாஷ்டாங்கமாக பரமாச்சாரியார் முன்பு விழுந்து வணங்கினேன். *பிறகு 230 குருமஹாசந்நிதானத்திடம் சொன்னார், ''உங்க மடத்துக்கு மட்டும் வச்சின்றவேண்டாம் வேண்டாம்... இவர் உலகத்திற்கே உரியவர்'' தமிழ் மட்டும் சொல்லிக் கொடுத்தா பத்தாது. சம்ஸ்கிரதமும் சொல்லிக்குடுக்கணும். சைவ சித்தாந்தம் மட்டும் சொல்லிக்கொடுத்தா பத்தாது. வேதங்கள், வேதாந்தங்களும் கூட கத்துக்குடுக்கணும். *அவர்கள் கொடுத்த ஆசி, வழிகாட்டுதல் என்னுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பலமாகவும், நான் செய்ய வேண்டிய என்னுடைய எதிர்கால பணிகளுக்கான வழிகாட்டியாக அமைந்தது. *அதற்குப்பிறகு எப்பொழுதெல்லாம் தொண்டை மண்டல ஆதீன குருமகா சந்நிதானம் அவர்கள் பரமாச்சாரியாரை சென்று தரிசித்தார்களோ, *அப்போதெல்லாம் தவறாது என்னைப் பற்றி விசாரிப்பதுமாக இருந்தார், அதற்குப்பிறகு பலமுறை பரமாச்சாரியார் ஜீவசமாதி அடையும் வரை பல முறை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. *அதற்குப் பிறகும், அடுத்த பெரியவர் ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளோடும் மிக நெருங்கிய தொடர்பும், நட்பும் இனிமையாக இருந்தது. *சுவாமிகள் மகாசமாதி அடையும் வரை கடைசி காலம் வரை மிக நெருக்கமான தொடர்பில் இருந்தோம், பலமுறை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நம்முடைய தியான பீடத்தின் கிளை ஆசிரமங்களுக்கு வந்திருக்கிறார். Get Your Free E-Passport at join.kailaasa.org and receive all the gifts to live enlightenment!