UNCLUTCHING® - The Ultimate Technique (Tamil)
உள் விழிப்பை அனுபவமாக உணர்வதே 'UNCLUTCHING' மனித மூளையே உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. மூளை தனது சமநிலையை இழக்கும்போது அந்நிலை நமது உடல் முழுவதும் பரவுகிறது. எண்ண ஓட்டங்கள் என்பது ஒரு தூய சக்தி.. அதற்கு மனிதர்களின் வாழ்வில்... தினமும் நடக்கும் செயல்களின் மீது விளைவூகளை உருவாக்கும் சக்தி உண்டு. விஞ்ஞானிகள் மனித மூளை மின்காந்த புலத்தை உருவாக்குவதாகவூம் அதனை என்செபலோகிராப் மூலம் அளந்திட இயலும் என்றும் சொல்கின்றனர். நம்முள் எண்ணங்கள் உருவாகும்போதெல்லாம் இந்த மின்காந்த புலம் நமது மூளையால் உருவாக்கப்படுகிறது. நமது மனம் எப்போதுமே அமைதியின்றி இருப்பதால்.. நம்மை தொடர்ந்து சக்தியை உருவாக்கிக்கொண்டே இருக்கும் கருவிக்கு ஒப்பிட்டுக்கொள்ளலாம். பயம்... நரம்புத் தளர்ச்சியை உருவாக்குகிறது.. கோபம் தலைவலியையும்.. வன்முறையையும் உருவாக்குகிறது. குழப்பமான எண்ணங்கள்... உறுப்புகளில் தளர்ச்சி மற்றும் உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம்.. புற்று நோய் கட்டிகள் மற்றும் மன வியாதிகளை உருவாக்குகிறது. இவற்றால்.. நாமே நம்மை இறப்பை நோக்கி அழைத்துச் செல்கின்றௌம். நமது எண்ணங்கள் சிக்கலான சக்தி அமைப்பினை உருவாக்குகிறது. இதனை சக்திவாய்ந்த உபகரணங்களால் கண்டுபிடிக்கக் கூடும்.. மேலும் ஞானமடைந்த ஞானிகளால்.. உணர இயலும். இந்த சக்தி அமைப்புக்களே எண்ண உருவங்களாக அறியப்படுகிறது. ஆச்சரியப்படும் வகையில் நமது எண்ணங்களே.. உருவங்களை உருவாக்குகிறது. நாம் ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான எண்ணங்களையும்... உருவங்களையுவும் தொடர்ந்து நம்மைச்சுற்றி வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றௌம். நம்மால் அவற்றை பார்க்க இயலாதபோதும்.. மற்ற சக்தி வடிவங்களைப் போல அவை தொடர்ந்து இருக்கின்றன. நிறைய மனிதர்களுக்கு அடுத்தவர்களின் 'எண்ண உருவங்களை' உணர முடியும். ஆனாலும் அவர்களுக்கிடைய சக்தி பரிமாற்றமானது விழிப்புணர்வு இன்றியே நடந்துகொண்டிருக்கிறது. நாம் சிலரை முதன் முதலாக சந்திக்கும்பொழுது சிலசமயம் விரும்புகிறௌம்.. சிலசமயம் விரும்புவதில்லை. இதற்கு காரணம் மேற்கண்ட சக்திப் பரிமாற்றமே!.