ஆதி சைவம் - இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

September 23, 2019

6,121 views

இன்றைய தியான சத்சங்கத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், கைலாயத்தில் மூலலிங்கத்தை உருவாக்கும் அறிவியலை அருளினார்.. மற்றும் இந்துக்கள் இந்துமதத்தைக் காக்க எவ்வாறு விழித்துக்கொள்ள வேண்டும் என்ற சத்தியங்களையும் அருளினார்... இந்த சத்தியங்களின் சாரம் ... நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்! உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. ஆழ்ந்து கேளுங்கள்.. கையிலாயத்தின் மூல லிங்கத்தை - எனர்ஜி ப்ளுப் பிரின்ட்-ஐ கட்டமைத்துக்கொண்டிருக்கின்றேன்.. எனர்ஜி ப்ளுப் பிரின்ட்டைதான் - மூல லிங்கம் என்று சொல்கின்றேன்! எனர்ஜி ப்ளுப் பிரின்ட் -ஐ எப்படி உருவாக்குகின்றேன் என்ற அறிவியலை விளக்குகின்றேன்;;. முதல் சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள். நாம் எல்லோருமே நம் வாழ்க்கையின் மூல லிங்கத்;தை எனர்ஜி ப்ளு பிரின்டை- ஐ வைத்திருக்கின்றோம்.. சில பேர் - கான்சியஷாக அதாவது விழிப்புணர்வோடு வைத்திருக்கின்றோம்.. அதாவது நேர்மையோடு நம் மனதிற்கு புரிந்து, நாம் என்னவாக மாற வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து நாம வைத்திருக்கின்ற கான்ஷியஸ் ப்ளுபிரின்ட். எனர்ஜி ப்ளு பிரின்ட் - மூல லிங்கம். பூசலார் நாயனார் தனக்குள் உணர்வாலே திருக்கோயிலை உருவாக்கினார், அதைத்தான் மூலலிங்கம் என்று சொல்கின்றோம். அந்த மூல லிங்கத்தைதான் - எனர்ஜி ப்ளுப் பிரின்ட் என்று சொல்கிறோம்.. அந்த எனர்ஜி ப்ளுப் பிரின்ட் -ஐ தான் கோயிலில் மூலவர் லிங்கத்தில் சக்தியாக பிரதிஷ்டை செய்கிறோம்.. மேட்டூர் ஜலகண்டேஸ்வர ஆலயத்தில் நான் தான் என் பூர்வ ஜென்மத்தில் அந்த லிங்கத்தைப் பிராணப் பிரதிஷ்டை செய்தேன். நான் என்னிடம் இருப்பது என்று சொல்வது அந்த மூலவர் லிங்கம் அல்ல. ஸ்தூல லிங்கம் அல்ல. பிராணப்பிரதிஷ்டை செய்கின்ற மூல உயிர் சக்தி, அந்த எனர்ஜி ப்ளுப் பிரின்ட் என்னிடம் இருக்கிறது என்று சொன்னேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. எனர்ஜி ப்ளுபிரின்ட் - பூசலார் நாயனார் தனக்குள் உணர்வால்; அமைத்த வைத்த மூல லிங்கத்தின் சக்தி பெருமானே நேரில் எழுந்தளுகின்ற அளவிற்கு சக்திவாய்ந்ததாக இருந்தது! அதேபோல நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு எனர்ஜி ப்ளு பிரின்ட் இருக்கிறது அதை கான்ஷியசஸாக - விழிப்புணர்வோடு வாழ்ந்தீர்களானால் பெருமானே நேரில் வந்து காட்சி கொடுப்பார்! இந்துக்களே என்று விழித்துகொள்வீர்கள் என்று தெரியாது.. ! நான் இருக்கும்பொழுதே இந்த ஞானத்தை வாங்கிக்கொள்ளுங்கள்! நான் இருக்கும்பொழுது வாங்கிக்கொள்ளவில்லை என்றாலும், அதை தொடர்ந்து வழங்க என் சன்யாச பரம்பரியத்தை உருவாக்கி வைத்துவிட்டுத்தான் செல்வேன்.. இந்த முறை ஜெயித்தே தீருவது என்று பரமசிவன் முடிவுசெய்துவிட்டார்! உண்மையன சைவத்தை வேளாண்மை செய்யவே வந்திருக்கின்றேன். பல இடங்களில் சைவத்தை வேளாண்மை செய்யவந்த சைவ வேளாளன் நான்.. இந்த பரமசிக்ஞான சத்தியத்தை வேளாண்மை செய்ய வந்த சைவ வேளாளன் நான் வேளாண்மை செய்து விட்டேன்! அது விளைந்தும் விட்டது! நானும் நீங்களும் இணையாவிட்டல் உங்களுக்கும் இழப்பில்லை, எனக்கும் இழப்பில்லை இந்து மதத்திற்குதான் இழப்பு! நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் நம் இருவரையும் பிரிக்க நினைக்கின்றார்கள். முதல் சத்தியம் : உங்கள் வாழ்க்கைக்கான உயிர் மூல லிங்கத்தை உருவாக்கவேண்டுமானல்.. தேவையான முதல் விஷயம் - ஆழந்த தெளிந்த, நம்மோடு நாமே முதிர்ந்த உரையாடலை வைத்துக்கொள்கின்ற மிக எளிமையான செயல், சிறிது நேரம் நீங்களே உங்களுடன் அமர்ந்து உள்ளுக்குள் என்னதான் நடக்கின்றது? என்னதான் ஓடிக் கொண்டிருக்கின்றது? உங்கள் வாழ்க்கையின் முக்கியமான எண்ண ஒட்டம் என்ன? என்னதான் உள்ள இருக்கிறது என்று திரும்பிப் பார்க்க கொஞ்ச நேரமாவது ஒதுக்குவதுதான்!. இதுதான் அடிப்படை தேவை! உங்களின் உயிர் மூல லிங்கத்தை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவை! ஒரு நாளைக்கு ஒரு அரைமணி நேரமாவது நீங்கள் உங்களோட அமர்ந்திருப்பது. கைலாயத்தின் உயிர் மூல லிங்கத்தை உருவாக்குவதற்கு எனக்கு என்னவெல்லாம் தேவைப்பட்து என்று சொல்கிறேன். அதைப் புரிந்துகொண்டீர்களால்.. அதுவே தான் உங்களுக்கும்! முதலில் எனக்கு தேவைப்பட்டது அமைதி - தனிமை! அமைதி என்பது எந்த ஒரு மிகப்பெரிய செயல் செய்வதற்கும் அடித்தளமான தேவை! நான் உருவாக்கிக்கொண்டிருக்கும் திருக்கைலாயத்தின் மூல லிங்கம் முழுமையாக உருவாவதற்கு எனக்குத் தனிமை தேவை! Tamil Discourse Delivered by HDH Sri Nithyananda Paramashivam on 21st September 2019

© 2022 Sri Nithyananda Paramashivam. All rights reserved.

KAILASA's Nithyananda TV gives you front-row access to live Satsangs, discourses, latest news, events, and teachings from the SPH Nithyananda Paramashivam.