ஆதி சைவம் - வாழ்க்கை சுகம் தருவதற்காக அல்ல, நலம் தருவதற்காக!
இன்றைய சத்சங்கத்தின் எழுத்தாக்கம்! 26-செப்டம்பர்-2019 *நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்... * உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. ஆழ்ந்து கேளுங்கள்.. இன்று ஒரு ஆழமான உயிரையே உயிர்பிக்கும் சத்தியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் கேளுங்கள். * சான்றோன் செய்யும் அறிவியல், தாயார் அன்னை பராசக்தி காஞ்சியம்பதி ஏவியபோது கொண்டுவந்த அறிவியல், சான்றோன் செய்யும் அறிவியல் இதை உள்வாங்கிக் கொள்ளுங்கள். * ஆழ்ந்து கேட்டுக்கொள்ளுங்கள்.. என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய நிகழ்ச்சி, இதைச் சொன்னால் உங்களுக்குப் புரிந்துவிடும்.. * ஒருமுறை அருணகிரி யோகீஸ்வரரிடம் சென்று என்னுடைய இரண்டு குருமார்கள், இரண்டு பேரைப்பற்றியும், குப்பம்மாள் ரகுபதியோகி அதாவது விபுதானந்தபுரி, யோகானந்தபுரி புகார் செய்துகொண்டிருந்தேன். அதாவது இவர்கள் இருவரும் நான் தினந்தோறும் மலைவலம் வந்தாகவேண்டும் என்பதில் மிகுந்த சீரியசாக, கண்டிப்பாக இருப்பார்கள். கட்டாயப்படுத்தியாவது தினம்தோறும் நான் அண்ணாமலையை வலம் வருவதை செய்தே தீருவார்கள். * ஒருநாள் வெகு நேரம் அருணகிரியோகீஸ்வரரோடு இருந்துவிட்டு வீட்டிற்கு சென்றேன், மறுநாள் விடிகாலை கோயில் திறக்கும்பொழுது வந்துவிட வேண்டும் என்பதற்காக அன்று மலைசுற்றச் செல்லவில்லை. பொதுவாக இரவில்தான்.. மலைச்சுற்றச் செல்வேன். ஏனென்றால் பகல்முழுக்க அருணகிரியோகீஸ்வரவரோடு இருந்துகொண்டிருந்ததனால், அந்தக் காலக்கட்டத்தில் மட்டுமல்ல மற்றக் காலக்கட்டத்தில்கூட பொதுவாக இரவில் தான் மலைச்சுற்ற செல்வது வழக்கம். * ஏனெனில் பகலில் இந்த குருமார்கள் எல்லோருடனும் இருப்பது, கோவிலுக்குச் செல்வது இதுபோன்று வாழ்க்கை இருப்பதனாலே இரவிலேதான் மலைச் சுற்ற செல்வது வழக்கம். ஒரு நாள் அந்த மாதரி அருணகிரி யோகீஸ்வரரோடு இருந்ததனால், இரவு வெகுநேரம் இருந்ததனால், காலையில சீக்கிரம் வர வேண்டும் என்பதனால் அன்று மலைச் சுற்றச் செல்லவில்லை. * அதை தெரிந்து கொண்டு அன்று இரகுபதியோகியும், விபுதானந்தபுரியும் என்னைக் கடிந்துக்கொண்டார்கள், போய் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அதனால் மறுநாள் வந்தது அவர்களைப் பற்றி அருணகிரியோகீஸ்வரரிடம் புகார் செய்துகொண்டிருந்தேன். அருணகிரியோகீஸ்வரர் கையை மட்டும்தான் தூக்கினார்.. Satsang delivered on 26th September 2019